எம்மைப்பற்றி

எளிமையான முறையில் மாவேள் வாடிக்கையாளராக இணையவும், வணிகத்தை மேற்கொள்ளவும், சலுகை செய்திகளை அறியவும் இந்த செயலி உங்களுக்கு பயன்படும்.
மனிதர்களின் அடிப்படை தேவைகளான உணவு,உடை,இருப்பிடத்தை தனக்குத்தானே ஏற்படுத்திகொள்வதே சிறந்த சமூகமாக கருதிகிறோம். தமிழ்நாடு மற்றும் இந்தியா, கனடா, மலேசியா உள்ளிட்ட உலகநாடுகளில் எமது சேவையை விரிவுபடுத்தியுள்ளோம்.
100% இயற்கை வேளாண்மையும், நிறுவனத்திற்கு சொந்தமான & 24மணிநேர படக்கருவியின் நேரடி கண்காணிப்பில்  எண்ணெய் ஆலைகள் மற்றும் பிற தயாரிப்புகள் நடைபெறுவதே மாவேளின் சிறப்பு.
இன்றைய உலக வல்லாதிக்க பொருளாதார செயற்கை கட்டமைப்புகளால் நீராகாரம், தாய்ப்பால் முதற்கொண்டு வணிகமாக்கபட்டுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் வணிகமும் நியாமான முறையில் நிகழாமல், ரசாயனத்தை முன்னிலைப்படுத்தியும், உழைப்பவர்களின் உரிமை மறுக்கப்பட்டும், அப்பாவி மக்கள் வஞ்சிக்கப்பட்டும் நடைபெற்று வருகிறது.  
இந்த அபாயகரமான சூழலை உலகின் மூத்தகுடியான தமிழ்க்குடியின் வாரிசுகளைக்கொண்டு, அனைத்து சகோதர மொழிபேசும் மக்களுக்குமாக வணிகத்தை நியாயமான முறையில் வழங்குவதற்காக மாவேள் உருவாக்கப்பட்டு வெற்றிபெற்றுள்ளது.
நீங்கள் வாடிக்கையாளராகவோ அல்லது வணிகராகவோ இணைந்து கொடுக்கும் ஆதரவால் கிடைக்கும் வருமானங்கள் பெரும்பகுதி உழவர்கள் மற்றும் உழைப்பாளர்களின் வாழ்வை மேம்படுத்தும் திட்டங்களுக்காக  பயன்படுத்தப்படுகிறது என்பது மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றோம்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               நன்றி                                                                                                                 
மாவேள்.