Sale!
கருஞ்சாயப்பொடி ( Organic Hair Dye )

கருஞ்சாயப்பொடி ( Organic Hair Dye )


130.00 120.00

எடை : 80 கிராம்
உள்ளடக்கம் :  மருதாணி , கரிசலாங்கண்ணி,  நுணா இலை, வேம்பு, ஆமணக்கு


உள்ளடக்கம் :  மருதாணி , கரிசலாங்கண்ணி,  நுணா இலை, வேம்பு, ஆமணக்கு

பயன்படுத்தும் முறை :
அழகன் அழகி ஒன்று மற்றும் இரண்டு என்ற இரண்டு பொட்டலம் உங்களுக்கு வழங்கப்படும். ஒன்றாவது பொட்டலத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்ற தகவலை முதலில் பார்க்கலாம்.

  1. உங்கள் தலைமுடி தெரியாத அளவில் தலை நிறைய தாராளமாக பூசும் அளவிற்கு பொடியினை எடுத்துக்கொள்ளவும். அதாவது ஒரு பொட்டலத்தை 3 முறை ஆண்களும், 2 முறை பெண்களும் பயன்படுத்த இயலும். இப்போது ஒரு கிண்ணத்தில் பொடியை தேன் போல கலக்கிக்கொள்ளும் அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் பொடியை கொட்டிவிடவும். நன்றாக கலக்கவும். 1 இரவு அல்லது குறைந்தது 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் எங்கெல்லாம் நரைமுடி உள்ளதோ அங்கெல்லாம் தாராளமாக பூசவும். ஒரு மணிநேரம் கழித்து வெறும் தண்ணீரில் தலைமுடியை நன்றாக அலசவும். இப்போது உங்கள் முடி அரக்கு நிறத்தில் காட்சியளிக்கும். பின் இரண்டாவது பொட்டலத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
  2. முதல் பொட்டலம்போல இதனை ஊறவைத்திடக்கூடாது. பொட்டலத்தை திறந்தநிலையில் வைக்கவும் கூடாது. அதன் குணம் மாறிவிடும். தேவையான அளவினை எடுத்தபிறகு நல்ல காற்றுபோகாத டப்பாவில் பொட்டலத்தோடு மூடிவைக்கவும். சரி இப்போது எவ்வாறு உபயோகிப்பது என்று பார்க்கலாம். வெதுவெதுப்பான சூட்டில் தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். பொடியை கொட்டிக்கலக்கவும். நன்றாக கலக்கியதும் 5 நிமிடத்திற்குள் தலையில் பூசிவிடவும். இந்தமுறையும் நீங்கள் 1 மணிநேரம் காத்திருக்க வேண்டும். பின்னர் சீயக்காய், சாம்பு என எதுவும் போடாமல் குளித்துவிடவும். இப்போது அரக்கு நிறத்தில் இருந்த முடி கருமை நிறத்திற்கு மாறியிருக்கும்.

செய்யக்கூடாதவை :

  • பூசும் முன்னர் தலையில் எண்ணெய் பசை இருக்கக்கூடாது.
  • பொடி பூசிய  பின்னர் சாம்பு, சீயக்காய் பயன்படுத்தக்கூடாது.இப்பொடியே உங்கள் தலையை சீயக்காய் குளியல்போல பாதுகாக்கும்.
  • பனி நேரம் / குளிர்ந்த நேரம் / சைனஸ் என்று சொல்கின்றார்களே அவர்கள் பயன்படுத்தினால் சளிபிடிக்க வாய்ப்புள்ளது. உடல் சூடு உள்ளவர்கள் எந்நேரமும் பயன்படுத்தலாம். மற்றவர்கள் மூலிகைகள் குளிர்ச்சியை உண்டாக்கிட வாய்ப்பு உள்ளதால் ஒருமுறை பயன்படுத்திப்பார்த்துவிட்டு உடல் தகுதியை பொருத்து நேரத்தை முடிவு செய்யவும்.

எதிர்பார்ப்பும் / ஏமாற்றமும் :

  • இது 100% இயற்கை முறையில் உள்ள மூலிகைக்கலவையாகும்
  • இரசாயனங்களைப் 1 முறை பயன்படுத்திவிட்டு பளிச்சென்று கருமையைக் கண்டவர்கள் சற்று பொறுமையான மனநிலையில் இதனை பயன்படுத்த வேண்டும்.
  • சிலருக்கு ஒருமுறையில் கருமை நிறம் வந்துவிடும். சிலருக்கு முதல் ஞாயிறு பாதியும், அடுத்த வாரம் சற்று கூடுதலும், மூன்றாவது ஞாயிறு கருமையும் பெற்றுள்ளதாக வாடிக்கையாளர்கள் கருத்துக்களைப் பெற்றுள்ளோம்.
  • பின்னர் மாதம் ஒருமுறை / 15 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் கருத்துகளை பெற்றுள்ளோம்.

 

 


கருஞ்சாயப்பொடி ( Organic Hair Dye )

 

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.